வரதட்சணை கேட்டு துன்புறுத்தல்

ByEditor 2

Mar 26, 2025

இந்தியாவின் அரியானா மாநிலம், ஹிகார் பகுதியை சேர்ந்த குத்துச்சண்டை வீராங்கனை ,பொலிஸ் நிலையத்தில் வைத்து கணவனை புரட்டி எடுத்த சம்பவம் பரப்பரப்பை ஏற்படுத்திள்ளது.

இது குறித்த காணொளியும் சமூகவலைத்தளத்தில் பரவி வருகின்றது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

 திடீரென ஆவேசம் அடைந்து கணவரின் தலையை  பிடித்து குத்து

அரியானா மாநிலம், ஹிகார் குத்துச்சண்டை வீராங்கனை ஸ்வீட்டி பூரா. இவரது கணவர் கபடி வீரரான தீபக் ஹூடா.

இந்நிலையில் தனது கணவர் கூடுதல் வரதட்சணை கேட்டு துன்புறுத்துவதாகவும், தன்னை துஷ்பிரயோகம் செய்வதாக கூறி ஸ்வீட்டி பூரா நீதிமன்றில் விவாகரத்துக்கு மனு தாக்கல் செய்தார்.

மேலும் ஹிகார் பொலிஸ் நிலையத்தில் கணவர் மீது முறைப்பாடு செய்தார். இந்த வழக்கு தொடர்பாக விளக்கம் அளிக்க நேற்று முன்தினம் தீபக் ஹூடா தனது குடும்பத்தினருடன் பொலிஸ் நிலையத்திற்கு சென்றுள்ளார்.

அங்கு பொலிஸார் அவரிடம் விசாரணை நடத்திக் கொண்டு இருந்தபோது ஸ்வீட்டி பூராவும் தனது குடும்பத்தினருடன் பொலிஸ் நிலையத்திற்கு வந்தார்.

பொலிஸ் நிலையத்தில் இருந்த தனது கணவரை கண்ட ஸ்வீட்டி பூரா திடீரென ஆவேசம் அடைந்து கணவரின் தலையை கெட்டியாக பிடித்து கொண்டு கழுத்தில் சரமாரியாக குத்து விட்டார்.

கணவர் வலி தாங்க முடியாமல் அலறி துடித்தபோதும் ஸ்வீட்டி , விடாமல் அவரை அடித்து உதைத்தார். இதனைக் கண்டு திகைத்துப் போன பொலிஸார் மற்றும் அவர்களது குடும்பத்தினர் ஸ்வீட்டியை விலக்கி விட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *