போலியான கனேடிய விசாக்களுடன் வெளியேற முயன்ற இலங்கையர்கள் ஒன்பது பேர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
கட்டுநாயக்க விமான நிலைய குடிவரவு அதிகாரிகள் நேற்று முன் தினம் (24) மாலை ஒரு சந்தேக நபரின் பயண ஆவணங்கள் குறித்து சந்தேகம் எழுப்பியதைத் தொடர்ந்து சந்தேக நபர்களைக் கைது செய்தனர்.
கனடிய விசாவைப் பெற தலா 4.5 மில்லியன் ரூபா
தொழில்நுட்ப சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் பயணியின் கனேடிய தொழில் விசா போலியானது என கண்டறியப்பட்ட அதே நேரத்தில் அவரது கடவுச்சீட்டு உண்மையானது என்று கண்டறியப்பட்டது.