பதுளை மாவட்டம் போகஹகும்புர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட விகாரையொன்றில் கஞ்சா செடிகள் வளர்த்த தேரர், போகஹகும்புர பொலிஸாரால் திங்கட்கிழமை (24) அன்று கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய ஒஹிய விவேகாராம விகாரை வளாகத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது சுமார் ஆறு அங்குல உயரமுள்ள 571 கஞ்சா செடிகள் கண்டுபிடிக்கப்பட்டன.
இது தொடர்பாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட தேரர் மற்றும் கஞ்சா செடிகள் வெலிமடை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை போகஹகும்புர பொலிஸார் நடத்தி வருகின்றனர்.