இந்தியாவில் இணையத்தள விளையாட்டுக்களுக்கு தடை

ByEditor 2

Mar 24, 2025

இந்தியாவில் பயன்படுத்தப்பட்டு வரும் வெளிநாட்டு இணையத்தள விளையாட்டுக்களை விளையாடுவதற்கு அந்த நாட்டு அரசாங்கம் தடைவிதித்துள்ளது.

இணையத்தளங்களில் விளையாடப்படும் சில விளையாட்டுக்களுக்கு சில இணையதளங்கள் ஜி.எஸ்.டி.யை பதிவு செய்யத் தவறியதன் மூலம், வரி செலுத்த வேண்டிய தொகைகளை மறைத்து, வரிக் கடமைகளைத் தவிர்த்து வருகின்றன.

அத்தகைய இணையத்தளங்களுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ள இந்திய அரசு தீர்மானித்துள்ளது.

தடை

அதன் ஒரு பகுதியாக இந்தியாவில் சட்டவிரோதமாக இயங்கி வரும் 357 வெளிநாட்டு இணையத்தள விளையாட்டுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் சட்டவிரோதமாக இணையத்தள விளையாட்டுக்களுடன் இணைக்கப்பட்டுள்ள வங்கி கணக்குகளையும் மத்திய அரசு இரத்து செய்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *