ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மே மாதம் வியட்நாமுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வியட்நாம் ஜனாதிபதியின் அழைப்பின் பேரில் அநுரகுமார திசாநாயக்க உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.
மேலும், இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள வியட்நாமின் துணை சபாநாயகர், இலங்கையின் சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவை சந்தித்தபோது உத்தியோகபூர்வ விஜயத்தை உறுதிப்படுத்தினார்.