சிவனொளிபாத மலைக்கு யாத்திரை சென்ற மொரட்டுவையைச் சேர்ந்த 62 வயதான அனுரகுமார பெர்ணாந்து, ஊசி மலையில் திடீரென நோய்வாய்ப்பட்டு ஞாயிற்றுக்கிழமை (23) உயிரிழந்துள்ளார்.
திடீரென சுகயீனமடைந்து அவரை, உறவினர்கள் நல்லத்தண்ணி நகருக்கு அழைத்து வந்து, அங்கிருந்து ஆம்புலன்ஸ் மூலம் மஸ்கெலியா மாவட்ட வைத்திய சாலைக்கு கொண்டு வரும் வேளையில் உயிர் இழந்துள்ளார்.
அவரது உடலம் டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்திய சாலையில் உள்ள சட்ட வைத்திய அதிகாரி முன்னிலையில் உடற் கூற்று பரிசோதனை மேற்கொண்ட பின்னர் உடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது என நல்லத்தண்ணி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சாந்த வீரசேகர தெரிவித்தார்.