மகனை கழுத்தறுத்து கொன்ற தாய்

ByEditor 2

Mar 23, 2025

கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்தவர் பிரகாஷ் ராஜு, இவரது மனைவி சரிதா . இந்த தம்பதிக்கு எதின் ராமராஜு (வயது 11) என்ற மகன் இருந்துள்ளார். மூவரும் குடும்பத்துடன் அமெரிக்காவின் கலிபோர்னியா, ஆரஞ்ச் நகரில் வசித்து வந்துள்ளனர்.

இதனிடையே, சரிதாவுக்கும் அவரது கணவர் பிரகாஜ் ராஜுக்கும் இடையே கருத்து வேறுபாடு காரணமாக 2018ம் ஆண்டு இருவரும் விவாகரத்து பெற்றதுடன் விவாகரத்துக்குபின் எதின் ராமராஜு தனது தந்தையான பிரகாஷ் ராஜு உடன் கலிபோர்னியாவில் வசித்து வந்துள்ளான்.

மகனின் கழுத்தை அறுத்த தாய்

அதேவேளை, சரிதா பேர்பெக்ஸ் நகரில் வசித்து வந்ததுடன்  மேலும், நீதிமன்ற அனுமதியுடன் அவ்வப்போது மகனை தன்னுடன் அழைத்து சென்று வளர்த்து வந்துள்ளார்.மகன் யார் பொறுப்பில் இருப்பது என்பதில் பிரகாஷ் ராஜுவுக்கும், சரிதாவுக்கும் இடையே ஓராண்டுக்குமேல் மோதல் ஏற்பட்டுள்ளது. மகனின் மருத்துவம், கல்வி தொடர்பான விஷயங்களில் தன்னை கேட்காமல் பிரகாஷ் முடிவெடிப்பதாகவும், மேலும் அவர் போதைப்பழக்கத்திற்கு அடிமையாக உள்ளதாகவும் சரிதா குற்றஞ்சாட்டி வந்துள்ளார்.

இந்நிலையில், மகனை தன்னுடன் 3 நாட்கள் வைத்துக்கொள்ள கோர்ட்டில் சரிதா அனுமதி பெற்று தனது வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். மகனை மறுநாள் (19 ம் திகதி) முன்னாள் கணவரிடம் ஒப்படைக்க வேண்டிய சூழ்நிலையில்  ஆத்திரமடைந்த சரிதா அங்கிருந்த கத்தியை கொண்டு மகனின்  கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார்.

பின்னர், தூக்க மாத்திரைகளை சாப்பிட்ட சரிதா தானும் தற்கொலைக்கு முயன்றுள்ளார். அதேவேளை, தூக்கு மாத்திரைகளை உட்கொண்ட பின் பொலிஸாரை அழைத்த சரிதா, மகனை கொன்றுவிட்டு தற்கொலை செய்ய தூக்க மாத்திரைகளை சாப்பிட்டுவிட்டேன் என்று கூறியுள்ளார். இதைக்கேட்டு  சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

மேலும், தூக்க மாத்திரைகள் சாப்பிடதில் மயங்கிய நிலையில் கிடந்த சரிதாவை மீட்ட பொலிஸார் சிகிச்சைக்கு அனுமதித்தனர். சிகிச்சைக்கு  சரிதா கைது செய்யப்பட்டுள்ளார்.  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *