இலஞ்சம் பெற முயன்ற வர்த்தகர் கைது

ByEditor 2

Mar 23, 2025

500,000 ரூபாவை இலஞ்சம் பெற முயன்ற வர்த்தகர் மற்றும் அரச சார்பற்ற நிறுவனத்தின் ஒருங்கிணைப்பாளர் உட்பட மூன்று சந்தேக நபர்களை இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு கைது செய்துள்ளது.

இரத்தினபுரி, பனாமுர பகுதியைச் சேர்ந்த வைத்தியர் ஒருவர் செய்த முறைப்பாட்டில் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வைத்தியச் சான்றிதழ்

ஆயுர்வேத வைத்திய சபையில் வைத்தியச் சான்றிதழை பெற்றுக்கொள்ள 1 மில்லியன் ரூபாய் கோரியதாக சந்தேகநபர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

சந்தேகநபர்களில் ஒருவர் களனியைச் சேர்ந்தவர் எனவும், வர்த்தகர் பிலிமத்தலாவைச் சேர்ந்தவர் எனவும், அரச சார்பற்ற நிறுவனத்தின் ஒருங்கிணைப்பாளர் நாவலப்பிட்டியைச் சேர்ந்தவர் எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளார்கள்.

இவர்கள் நேற்று  ( 22) கொழும்பில் சொகுசு ஹோட்டல் ஒன்றில் வைத்து இலஞ்சம் பெற முயன்றபோது கையும் களவுமாக பிடிபட்டுள்ளனர். சந்தேக நபர்கள் கொழும்பு தலைமை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *