தன்னியக்க இயந்திரத்தை தாக்கிய இளைஞன்

ByEditor 2

Mar 21, 2025

அரச வங்கியின் தன்னியக்க இயந்திரத்தை ( ஏடிஎம் இயந்திரம்) தாக்கி சேதப்படுத்தியதாகக் கூறப்படும் பிபில பகுதியைச் சேர்ந்த ஒரு இளைஞனை, முறைப்பாட்டாளர் தரப்பான வங்கிக்கு  224,750 ரூபாயை  செலுத்துமாறு கொழும்பு பிரதான நீதவான் தனுஜா லக்மாலி உத்தரவிட்டார்.

கொழும்பில் உள்ள ஒரு கட்டுமான இடத்தில் பணிபுரியும் பிபில பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது,  அவர், போதைப்பொருள் உட்கொண்ட பின்னர் அரச வங்கி ஏடிஎம் இயந்திரத்தை தாக்கி சேதப்படுத்தியதாகக் கூறப்படுகிறது.   

கொழும்பில் உள்ள ஒரு கட்டுமான இடத்தில் பணிபுரியும் பிபில பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது, அவர் கறுவாத் தோட்டம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

கொழும்பு நகர சபைக்கு அண்மையிலுள்ள வங்கிக் கிளையின் மேலாளர் அளித்த புகாரை தொடர்ந்து சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக கறுவாத்தோட்ட பொலிஸார் நீதிமன்றத்தில் தெரிவித்தார். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *