வீடொன்றில் கொலை செய்து கொள்ளை

ByEditor 2

Mar 19, 2025

வீடொன்றுக்குள் அத்துமீறி நுழைந்த இனந்தெரியாத நபர் ஒருவர் வீட்டிலிருந்த அங்கவீனரை கொலை செய்து சடலத்தை வாயிற்கதவுக்கு அருகில் கட்டி வைத்துவிட்டு பெறுமதியான பொருட்களைத் திருடிச் சென்றுள்ளதாக பெல்மடுல்ல பொலிஸார் தெரிவித்தனர்.

இரத்தினபுரி – பெல்மடுல்ல, மீகஹகொட பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

வாயிற்கதவுக்கு அருகில் சடலம் 

சம்பவத்தில் உயிரிழந்தவர் பெல்மடுல்ல, மீகஹகொட பிரதேசத்தைச் சேர்ந்த 58 வயதுடையவர் ஆவார்.

வீடொன்றின் வாயிற்கதவுக்கு அருகில் சடலம் ஒன்று காணப்படுவதாக பெல்மடுல்ல பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், சடலத்தை மீட்டு வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

சந்தேக நபர் வீட்டிலிருந்த நகைகள் மற்றும் பல்வேறு பொருட்களை திருடிச் சென்றுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். மேலும் தொடர்பான மேலதிக விசாரணைகளை பெல்மடுல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *