முதலையை மடக்கி பிடித்த மக்கள்

ByEditor 2

Mar 19, 2025

மட்டக்களப்பு பிள்ளையாரடி பிரதேசத்திலுள்ள உர்மனைக்குள் உட்புகுந்த சுமார் 8 அடி நீளம் கொண்ட முதலை ஒன்றை மக்கள் மடக்கி பிடித்து கட்டிவைத்துள்ளனர்.

குறித்த சம்பவம் நேற்று(18.03.2025) செவ்வாய்க்கிழமை இரவு 10.00 மணிக்கு இடம்பெற்றுள்ளது. 

இந்த முதலை அப்பகுதியிலுள்ள வீடு ஒன்றில் இரவு வேளைகளில் உட்புகுந்து அங்கு வளர்த்துவரும் கோழிகளை பிடித்து உண்டுவந்துள்ளது.

மாட்டிய முதலை

இந்தநிலையில், குறித்த திருட்டு முதலையை பிடிப்பதற்காக வீட்டின் உரிமையாளர் முதலை உட்புகும் பகுதியில் சுருக்கு வைத்துள்ள நிலையில், முதலை சம்பவதினமான நேற்று இரவு மாட்டிக் கொண்டுள்ளது.

மட்டக்களப்பில் வீடு ஒன்றுக்குள் புகுந்த முதலையை மடக்கி பிடித்த மக்கள் | People Caught A Crocodile In Batticaloa

பொதுமக்கள் அதனை மடக்கி பிடித்து கட்டிவைத்ததுடன் வனவிலங்கு திணைக்களம் பொலிஸாருக்கு அறிவித்துள்னர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *