விண்வெளியில் ஆராய்ச்சிக்காக அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசாவின் சார்பில் இந்திய வம்சாவளியை சேர்ந்த சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோரும் விண்வெளி ஆய்வு மையத்திற்கு சென்று 9 மாதங்கள் கழித்து இன்று அதிகாலை 3.27 மணிக்கு பூமியை வந்தடைந்துள்ளனர்.
ஸ்டார்லைனர் விண்கலத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு இருவரும் பூமிக்கு திரும்ப முடியாத சூழல் ஏற்பட்டது.

இந்த நிலையில் ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் நாசா நிறுவனம் இணைந்து கடந்த 15 ஆம் திகதி விண்கலம் ஒன்றை அனுப்பியது. 17 ஆம் திகதி இரவு 10.45 அளவில் விண்கலம் சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து புறப்பட்டுள்ளது.
இந்த விண்கலம் இன்று (19) அதிகாலை 3.27 அளவில் அமெரிக்காவின் புளோரிடா கடல் பகுதிக்கு வந்து மிகுந்த போராட்டங்களுக்கு மத்தியில் அவர்கள் பாதுகாப்பாக பூமிக்க வந்துள்ளமை பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது