வயல்வெளியில் இளைஞர் ஒருவரின் சடலம் மீட்பு

ByEditor 2

Mar 18, 2025

வவுனியா, தேவகுளம் வயல்வெளியில் இளைஞர் ஒருவரின் சடலம் பொலிஸாரால் நேற்று மீட்கப்பட்டுள்ளது.

மறவன்குளம் பகுதியைச் சேர்ந்த முனிரத்தினம் கருணா என்ற 23 வயது இளைஞரே இவ்வாறு வயல் வெளியில் சடலமாக மீட்கப்பட்டார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நபரின் சடலம் காணப்படும் பகுதிக்கு அருகில் அவர் கொண்டு வந்த பை, பாதணி மற்றும் தலைக்கவசம் காணப்படுவதோடு அந்தப் பகுதிக்கு வெளியில் உள்ள வீதியில் மோட்டார் சைக்கிளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

சடலத்தை நேற்றுக் காலை அவதானித்த ஊரவர்கள் பொலிஸாருக்கு வழங்கிய தகவலின் அடிப்படையில் அவர்கள் சடலத்தை மீட்டனர்.

இந்த மரணம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஈச்சங்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *