விவசாயிகளுக்கான உரமானிய பணம் கையளிப்பு

ByEditor 2

Mar 18, 2025

அரசாங்கத்தால் வழங்கப்பட்ட உர மானியப் பணத்தை சில விவசாயிகள் பெறவில்லை என்றும், அந்தப் பணம் திருடப்பட்டுள்ளமை தற்போது தெரியவந்துள்ளது என்றும் விவசாய பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்தார். 

நாடாளுமன்றத்தில் இன்று (18) சுசந்த குமார நவரட்ண எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே விவசாய பிரதி அமைச்சர் இதனை குறிப்பிட்டார்.

நிதி மோசடி 

அந்தவகையில், அனுராதபுரம் மாவட்டத்தில் மாத்திரம்155 விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட உர மானியப் பணத்தில் ரூ.2,934,310 திருடப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்தார். 

எனவே, இந்த சம்பவம் தொடர்பாக ஒரு அதிகாரி தற்போது கைது செய்யப்பட்டுள்ளதாகவும் விவசாய பிரதி அமைச்சர் கூறினார். 

அதேவேளை, சில விவசாயிகளின் உர மானிய நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியமை தொடர்பாக குற்றப் புலனாய்வுத் துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும், மேலும் விசாரணை நடைபெற்று வருவதாகவும் நாமல் கருணாரத்ன குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *