நாளை நீர் வெட்டு

ByEditor 2

Mar 18, 2025

நீர் கோபுரங்கள் மற்றும் விநியோக முறைமையின் பராமரிப்பு பணிகள் காரணமாக கட்டான நீர் விநியோக அமைப்பின் கட்டான வடக்கு பிராந்தியத்தில் 16 மணித்தியால நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக  தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.

அதன்படி, நாளை (19) காலை 8 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை 16 மணித்தியாலங்களுக்கு கட்டான வடக்கு பிரதேசத்தின் பல பகுதிகளில் நீர் விநியோகம் தடை செய்யப்படவுள்ளது.

நாட்டின் முக்கிய பகுதிகளில் அமுலாகும் நீர் வெட்டு | Water Cut In Major Parts Of The Country

இதன்படி, பம்புகுளிய, முருதான, கட்டான வடக்கு, கட்டான மேற்கு, கிழக்கு கட்டான, உடங்காவ, மானச்சேரிய, தோப்புவ, மேற்கு களுவாரிப்புவ, மேல் கடவல, கீழ் கடவல, வெலிஹேன வடக்கு, வெலிஹேன தெற்கு, ஆடிக்கண்டிய, எத்கால, எத்கால தெற்கு, மஹா எத்கால மற்றும் கிழக்கு களுவாரிப்புவ ஆகிய பிரதேசங்களுக்கு இக்காலப்பகுதியில் நீர் வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *