நல்லூர் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையின் மேற்பார்வையில் பொது சுகாதார பரிசோதகர் நிர்மலானந்தன் அவர்களின் ஆலோசனைக்கும் வழிகாட்டலிக்கும் அமைய, அங்காடி உணவகங்கள் மற்றும் தேநீர்சாலை என்பன தொடர்ச்சியாக பரிசோதிக்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் நல்லூர் பொது சுகாதார பரிசோதகர் ம.அனுசூதனன் தலைமையிலான குழுவினரால் கடந்த (12) திகதி அங்காடி பரிசோதிக்கப்பட்டன. இதன்போது கல்வியங்காட்டு பகுதியில் அமைந்துள்ள அங்காடியில், பழுதடைந்த குளிர்சாதன பெட்டியில் உரிய வெப்பநிலை பேணப்படாமல், பதனழிந்த ஐஸ்கிறீம்களை விற்பனைக்கு வெளிக்காட்டி வைக்கப்பட்டிருந்தமை அவதானிக்கப்பட்டது.
இதையடுத்து பழுதடைந்த குளிர்சாதன பெட்டியின் பதனழிந்த ஐஸ்கிறீம்களை பொது சுகாதார பரிசோதகர் ம.அனுசூதனன் அவர்கள் கைப்பற்றினார்.அங்காடி முகாமையாளருக்கு எதிராக நீதவான் நீதிமன்றில் பொது சுகாதார பரிசோதகர் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. வழக்கினை திங்கட்கிழமை (17) திகதி விசாரணைக்கு எடுத்துக் கொண்ட நீதவான், அங்காடி முகாமையாளருக்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்கு 135,000/= தண்டம் விதித்து தீர்ப்பளித்தார்.