போதையுடன் சிவனடி பயணித்த 11 பேர் கைது

ByEditor 2

Mar 16, 2025

பல்வேறு போதைப்பொருட்களை எடுத்துக்கொண்டு ஹட்டன் வழியாக சிவனொளிபாதமலைக்கு வந்த 11 பேரை கைது செய்த செய்த பொலிஸார். அவர்களை, ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின்னர், ஹட்டன் மாவட்ட நீதிபதி மற்றும் நீதவான் எம். பாருக், சந்தேக நபர்களை தனிப்பட்ட பிணையில் விடுவித்து   மீண்டும் நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (18)ஆஜர்படுத்த உத்தரவிட்டார்.

சிவனொளிபாதமலைக்கு வரும்போது பல்வேறு போதைப்பொருட்களை எடுத்துச் செல்லும் நபர்களைக் கைது செய்வதற்காக நல்லத்தண்ணி பொலிஸார்  இந்த மாதம் 12 ஆம் திகதி முதல் 15 ஆம் திகதி வரை மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றங்களில் ஆஜர்படுத்தப்பட்டதாக நல்லத்தண்ணி பொலிஸ் நிலைய  பொறுப்பதிகாரி இ.ஏ.பி.எஸ். வீரசேகர தெரிவித்தார்.

சந்தேக நபர்கள் 25 முதல் 40 வயதுக்குட்பட்டவர்கள் என்றும், நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்றும்   பொறுப்பதிகாரி இ.ஏ.பி.எஸ். வீரசேகர தெரிவித்தார். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *