தடுத்து வைக்கப்பட்டிருந்த இரண்டு இலங்கை படகுகள் விடுவிப்பு

ByEditor 2

Mar 14, 2025

மாலைதீவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இரண்டு இலங்கை மீன்பிடிப் படகுகள் விடுவிக்கப்பட்டுள்ளன.

இரண்டு படகுகள், சர்வதேச கடற்பரப்பில் பயணித்தபோது மாலைத்தீவு அதிகாரிகளால் தடுத்து வைக்கப்பட்டன.

எனினும் அரசின் கோரிக்கையின் பேரில் இரண்டு படகுகளும் விடுவிக்கப்பட்டன.

“சர்வதேச கடல் பகுதியில் தவறுகள் செய்யாமல் மீன்பிடியில் ஈடுபடும் மீனவர்களுக்கும், எல்லா நேரங்களிலும் சரியான பாதைகளில் பயணிக்கும் மீனவர்களுக்கும் கடற்றொழில் அமைச்சு துணை நிற்கிறது.

அதன்படி, அனைத்து மீனவர்களும் சர்வதேச விதிகள் மற்றும் விதிமுறைகளின்படி சரியான முறையில் மீன்பிடியில் ஈடுபடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.”

இலங்கையில் உள்ள மாலைத்தீவு உயர் ஸ்தானிகராலயம், வெளிநாட்டலுவல்கள் அமைச்சு மற்றும் படகுகளை விடுவிப்பதில் தொடர்புபட்ட அனைத்து தரப்பினருக்கும் மீனவர்களது குடும்பங்கள் நன்றியைத் தெரிவித்துள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *