இலங்கையில் அறிமுகமாகும் சீன விளையாட்டுகள்

ByEditor 2

Mar 13, 2025

இலங்கையில் தாய் ச்சி (Tai Chi) மற்றும் டிராகன் படகு பந்தயம் (Dragon Boat racing) உள்ளிட்ட விளையாட்டுகளை ஆரம்பிப்பதற்கும், மேம்படுத்துவதற்கும் ஆதரவளிப்பதாக சீன அரசாங்கம் இன்று அறிவித்துள்ளது.

இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சில் சீனத் தூதர் குய் ஜென்ஹாங் மற்றும் இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சர் சுனில் குமார் கமகே ஆகியோருக்கு இடையேயான சந்திப்பின் போது இது தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

இலங்கையின் விளையாட்டு மற்றும் இளைஞர் மேம்பாட்டிற்கு சீன அரசாங்கம் தனது ஆதரவை வழங்குவதாகவும் சீன  தூதர்  தெரிவித்துள்ளார்.

மேலும், இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை ஆராய்வது தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *