5,800க்கும் அதிகமானவர்களை புதிதாக அரச சேவையில் இணைத்துக் கொள்ள அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
பிரதமர் ஹரிணி அமரசூரிய, அமைச்சரவைக்குச் சமர்ப்பித்த அமைச்சரவைப் பத்திரத்தின் பிரகாரம் இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
அதன் பிரகாரம் எதிர்வரும் நாட்களில் துறைமுகங்கள், சிவில் விமான சேவை, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சுக்கு 909 பேரும், மகளிர் மற்றும் சிறுவர் விவகாரங்கள் அமைச்சுக்கு 109 பேரும், சுற்றாடல் அமைச்சுக்கு 144 பேரும், பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் அமைச்சுக்கு 2500 பேரும், கல்வி, உயர்கல்வி மற்றும் தொழில்கல்வி அமைச்சுக்கு 22 பேரும், நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சுக்கு185 பேரும், கடற்தொழில், நீரியல் வளங்கள் அமைச்சுக்கு 20 பேரும், பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள் மற்றும் உள்ளூராட்சி, மாகாண சபைகள் அமைச்சுக்கு 1615 பேரும் புதிதாக இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர்.
மேலதிக நியமனம்
அவர்களுக்கு மேலதிகமாக ஊவா மாகாண சபைக்கு 303 பேரும், மத்திய மாகாண சபைக்கு 72 பேரும் புதிதாக நியமிக்கப்படவுள்ளனர்.