இன்றைய வானிலை அறிக்கை

ByEditor 2

Mar 11, 2025

ஐந்து நகரங்களில் காற்றின் தரம் சற்று ஆரோக்கியமற்ற மட்டத்தில் பதிவாகியுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி அமைப்பு (NBRO) தெரிவித்துள்ளது.

இது குறித்து தேதிய கட்டட ஆராச்சி நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

இதன்படி, கொழும்பு உள்ளிட்ட சில பகுதிகளில் காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலையில் காணப்படுவதாக கூறியுள்ளது.

காற்றின் தரம் 

காலி, இரத்தினபுரி, எம்பிலிப்பிட்டி, மட்டக்களப்பு மற்றும் அனுராதபுரம் ஆகிய இடங்களில் காற்றின் தரம் இவ்வாறு சற்று ஆரோக்கியமற்ற மட்டத்தில் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த பகுதிகளில் காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலையிலிருந்து மிதமான நிலைக்கு மேம்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளது.

மேலும் இலங்கையின் பல பகுதிகளில் காற்றின் தரம் மிதமான அளவில் பதிவாகியுள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *