பேராதனை பொலிஸார் காட்டு விலங்குகளை வேட்டையாடியதற்காக துப்பாக்கிகள், வெடிமருந்துகள் மற்றும் பிற உபகரணங்களுடன் ஆறு சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர்.
இந்த சந்தேக நபர்கள் நேற்று (09) காலை விலங்குகளை வேட்டையாடுவதற்காக யஹலதென்ன பிரதேசத்திற்கு சென்ற போது அப்பகுதி மக்களால் பிடிக்கப்பட்டு, பொலிஸாருக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

விசாரணை நடவடிக்கை
அதன்படி, சந்தேக நபர்களிடமிருந்து சுட்டுக் கொல்லப்பட்ட ஒரு பன்றி, போர் 12 ரக தோட்டாக்கள் 3, ஒரு கோடாரி, ஒரு கைத்துப்பாக்கி, இரண்டு ட்ராகன் விளக்குகள் மற்றும் ஒரு கத்தியுடன் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்டவர்கள் 28 முதல் 71 வயதுக்குட்பட்ட மாவதகம பகுதியைச் சேர்ந்தவர்களாவர்.
மேலதிக விசாரணையின் போது, பேராதனை பொலிஸ் நிலைய அதிகாரிகள், யஹலதென்ன பகுதியில் வீதியோரத்தில் உள்ள ஒரு காட்டுப் பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 12 ரக போர் துப்பாக்கியையும் கண்டுபிடித்துள்ளனர்.
மேலதிக விசாரணைகளை பேராதனை பொலிஸாரும் மாவதகம பொலிஸாரும் மேற்கொண்டு வருகின்றனர்.