கணேமுல்ல சஞ்சீவவின் கொலைக்கு பிரதான சந்தேக நபர் கைது

ByEditor 2

Mar 10, 2025

கணேமுல்ல சஞ்சீவவின் கொலைக்கு மூளையாகச் செயல்பட்டதாகக் குற்றம் சாட்டப்பட்ட கெஹல்பத்தர பத்மே மற்றும் கமாண்டோ சாலிந்த ஆகியோரின் நெருங்கிய உதவியாளரான யோஹான் அனுஷ்க ஜயசிங்க என்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலதிக விசாரணைமடகந்த பகுதியைச் சேர்ந்த 24 வயதான யோஹான், கரந்தெனிய – மடககந்த இராணுவக் கமாண்டோ படையிலிருந்து தப்பியோடியவர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

கணேமுல்ல சஞ்சீவவின் கொலைக்கு பிரதான சந்தேக நபர் கைது | Main Suspect Arrested In Ganemulla Sanjeewa Murder

கடந்த 5 ஆம் திகதி கட்டுநாயக்க பகுதியில் மேல்மாகாண வடக்கு குற்றப்பிரிவினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே இந்தக் கைது இடம்பெற்றுள்ளது.

தடுப்புக் காவல் உத்தரவுக்கு அமைவாக சந்கேதநபரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணையின் போது, பன்னல – எலபலடகம பகுதியில் உள்ள ஒரு பாலம் ஒன்றின் கீழ் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட மைக்ரோ வகை துப்பாக்கியை பொலிஸார் கண்டுபிடித்தனர்.

அத்தோடு, மெகசின் மற்றும் 6 ரவைகளையும் பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகள் மேல்மாகாண வடக்கு குற்றப்பிரிவினரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *