பள்ளிவாசலில் இஃதிகாஃப் இருப்பதில், இங்கிலாந்து முஸ்லிம்களிடையே போட்டி

ByEditor 2

Mar 9, 2025

இங்கிலாந்து தலைநகர் லண்டனின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள  East London Mosque And Islamic Centre மசூதியில் ரமலான் மாதம் இறுதி பத்து நாட்கள் இஃதிகாஃப் இருக்கும் நபர்களை குலுக்கல் முறையில் தேர்வு செய்யும் நடைமுறை உள்ளது.

ஒவ்வொரு வருடமும் வெவ்வேறு நபர்களுக்கு இஃதிகாஃப் இருக்கும் வாய்ப்பு வழங்க வேண்டும் என்பதால் அந்த மசூதியின் உறுப்பினர்கள் அனைவரின் பெயர்களும் எழுதி ஒரு பெட்டியில் போட்டு குலுக்கல் முறையில் தேர்வு செய்யும் ஐம்பது நபர்கள் பள்ளிவாசலில் இறுதி பத்து நாட்கள் தங்கியிருந்து அமல்கள் செய்வதற்கு வாய்ப்பளிக்கப்படுகிறது.

இந்த வருடத்தில் இஃதிகாஃப் இருக்கும் நபர்களை நேற்றைய தராவீஹ் தொழுகைக்கு பின்னர் தேர்வு செய்யப்பட்ட நபர்கள் அல்லாஹ் அக்பர் என்று கூறியவாறு இமாமுடன் முஸாஅஃபா செய்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *