விமானநிலையத்தை விமானம் பழுதுபார்க்கும் மையமாக மாற்றக் கவனம்

ByEditor 2

Mar 8, 2025

மத்தள மகிந்த ராஜபக்ச சர்வதேச விமான நிலையத்தை விமானம் பழுதுபார்க்கும் மையமாக மாற்றுவது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற பாதீடு மீதான குழுநிலை விவாதத்தின் போது இதனைத் தெரிவித்தார்.

இந்த விடயம் தொடர்பில் அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்,

மத்தள விமானநிலையத்தை விமானம் பழுதுபார்க்கும் மையமாக மாற்றக் கவனம் | Converting Mattala Airport Aircraft Repair Center

“மத்தள விமான நிலையத்தை ஒரு பொருத்தமான நட்பு நாட்டுடன் இணைந்து இலாபம் ஈட்டும் நிறுவனமாக மாற்றுவது குறித்து அரசாங்கம் அவதானம் செலுத்தி வருகிறது.

மத்தள விமான நிலையம் சுமார் 36.5 பில்லியன் ரூபாய் செலவில் கட்டப்பட்டது.

கடந்த ஐந்து ஆண்டுகளில் இந்த விமான நிலையத்திற்காக 38.5 பில்லியன் ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளது.

அதனால் இந்த நிறுவனத்தை இலாபம் ஈட்டும் ஒரு நிறுவனமாக மாற்றுவதற்கு எதிர்பார்க்கிறோம்” என அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *