தங்க கடத்தலில் சிக்கிய தமிழ் பட நடிகை!

ByEditor 2

Mar 5, 2025

துபாயில் இருந்து தங்கத்தை கடத்தி வந்த பிரபல கன்னட நடிகை ரான்யா ராவ் பெங்களூரு விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

கர்நாடக மாநிலம் சிக்கமகளூருவை சேர்ந்த ரன்யா ராவ் (32) கன்னடம், தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழில் நடிகர் விக்ரம் பிரபு நடித்த ‛வாகா’ திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக ந‌டித்துள்ளார்.

அடிக்கடி டுபாய்க்கு பயணம்; தங்க கடத்தலில் சிக்கிய தமிழ் பட நடிகை! | Ranya Rao Film Actress Caught In Gold Smuggling

15 நாள்களில் ரான்யா நான்கு முறை துபாய் பயணம்

கடந்த 15 நாள்களில் ரான்யா நான்கு முறை துபாய் சென்று திரும்பியதனால், நடிகை ரான்யா ராவ் விசாரணை வளையத்திற்குள் வைக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில், கடந்த திங்கட்கிழமை துபாயில் இருந்து பெங்களூரு விமான நிலையத்திற்கு திரும்பியுள்ளார் ரான்யா.

அப்போது அவரை சோதித்ததில் அவரிடம் இருந்து 14.8 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டு  கைது செய்யப்பட்டு,  14 நாள்கள் நீதிமன்ற காவலில்  வைக்கப்பட்டுள்ளார்.

அடிக்கடி டுபாய்க்கு பயணம்; தங்க கடத்தலில் சிக்கிய தமிழ் பட நடிகை! | Ranya Rao Film Actress Caught In Gold Smuggling

ரான்யா நகைகளை அணிந்தும், துணிகளுக்குள் தங்க கட்டிகளை மறைத்தும் கடத்தி வந்துள்ளார். இவர் சோதனைகளில் இருந்து தப்பிக்க சில அதிகாரிகள் மூலம் முயற்சி செய்துள்ளார் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதற்கு முன்பு அவர் துபாயில் இருந்து பெங்களூருவிற்கு வந்திறங்கியதும் தன்னை கர்நாடகா டிஜிபியின் மகள் என்று கூறி, போலீஸாரை காவலுக்கு வர கூறியிருக்கிறார்.

தற்போது இந்தக் கடத்தலில் இவர் மட்டும் சம்பந்தப்பட்டிருக்கிறாரா அல்லது அவருக்கு பின்னால் பெரிய நெட்வொர்க் இருக்கிறதா என்ற விசாரணை போய்கொண்டிருக்கின்றது.

அடிக்கடி டுபாய்க்கு பயணம்; தங்க கடத்தலில் சிக்கிய தமிழ் பட நடிகை! | Ranya Rao Film Actress Caught In Gold Smuggling

சம்பவம் தொடர்பில்  அவரது அப்பா (கர்நாடகா டிஜிபி) கூறிகையில்,

“ரான்யா ராவின் திருமணத்திற்கு பின்பு அவருக்கும், எங்களுக்கு எந்த தொடர்பும் இல்லை. அவர் கணவர் என்ன செய்கிறார் என்பது எங்களுக்கு தெரியாது. தற்போது ரான்யா குறித்து கிடைத்துள்ள தகவல் அதிர்ச்சியாகவும், ஏமாற்றமாகவும் உள்ளது. அவர் தவறு செய்திருப்பது உறுதியானால் சட்டம் தன் கடமையை செய்யும்” என்று கூறியிருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *