ஹபரணை, புவக்பிட்டிய பாலத்திற்கு அருகில் வைத்து யானையின் தாக்குதலுக்குள்ளாகி யானைப்பாகன் உயிரிழந்துள்ளதாக ஹபரணை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
செவ்வாய்க்கிழமை (04) அன்று யானையை குளிப்பாட்டி விட்டு, வீடு திரும்பிக் கொண்டிருந்த போது, ,இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
ஹபரன பரண போல வீதியைச் சேர்ந்த ரோஷன் விராஜ் என்பவரின் பராமரிப்பில் இருந்த பொடி ராஜு என்ற யானையால் தாக்குதல் நடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும், குறித்த யானை மீகொட, பழைய வீதியை சேர்ந்த பாரத அமரதுங்கவுக்கு சொந்தமானது என தெரிவிக்கப்படுகிறது.