சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டு வரப்பட்ட சிகரெட்டுகளுடன் ஒரு சந்தேக நபர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து செவ்வாய்க்கிழமை (04) கைது செய்யப்பட்டுள்ளார்.
விமான நிலையப் பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பணியகம் மேற்கொண்ட சோதனையின் போது துபாயிலிருந்து இலங்கைக்கு வந்த ஒருவர் 10,000 சிகரெட்டுகளுடன் (50 அட்டைப் பெட்டிகள்) கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் பொலன்னறுவையை சேர்ந்த 32 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு மேற்கொண்டு வருகிறது.