கடந்த 27 திகதி நுவரெலியா – நானுஓயா, பால்மர்ஸ்டன் தோட்டத்தில் இருந்து இறந்த புலியொன்று மீட்கப்பட்டுள்ளது.
2023 ஆம் ஆண்டுக்குப் பிறகு நுவரெலியா வனவிலங்கு சரணாலயத்தில் காணப்பட்ட முதல் புலி மரணம் இதுவாகும் எனவும், வேறொரு விலங்குடன் ஏற்பட்ட மோதலின் விளைவாக இந்த புலி இறந்திருக்கலாம் எனவும் , வனவிலங்கு அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.
குறித்த புலி 1-2 வயதுக்குட்பட்ட பெண் விலங்கு என்றும், நுவரெலியா வனவிலங்கு அலுவலகம் இது தொடர்பாக விசாரணைகள் மேற்கொண்டு அறிக்கைகளை நுவரெலியா நீதிமன்றத்தில் சமர்ப்பித்த பின்னர் சடலம் பிரேத பரிசோதனைக்காக ரந்தெனிகல கால்நடை பிரிவுக்கு அனுப்பப்படும். என தெரிவிக்கப்படுகிறது.