கணேமுல்ல சஞ்சீவ கொலை தொடர்பாக கைது செய்யப்பட்ட மேலும் இரண்டு சந்தேக நபர்களை மார்ச் 7, 2025 வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு தலைமை நீதவான் தனுஜா லக்மாலி இன்று உத்தரவிட்டார்.
குற்றம் செய்வதற்கு சிம் அட்டைகளை வழங்கியதாகவும், கொலைக்கு தூண்டியதாகவும், உதவியதாகவும் சந்தேகத்தின் பேரில் மினுவங்கொடையைச் சேர்ந்த உதார நிர்மல் குணரத்ன மற்றும் துனகஹா மினுவங்கொடை வீதியை சேர்ந்த நளின் துஷ்யந்த ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
1979 ஆம் ஆண்டு 48 ஆம் இலக்க பயங்கரவாதத் தடுப்பு (தற்காலிக ஏற்பாடுகள்) சட்டத்தின் கீழ் அவர்கள் 72 மணி நேரம் தடுத்து வைக்கப்பட்டு, மேலதிக விசாரணைகளுக்காக இன்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.