கான்ஸ்டபிள் இல்லத்தில் மீட்கப்பட்ட தோட்டாக்கள்

ByEditor 2

Mar 3, 2025

அனுராதபுரம் – கலென்பிந்துனுவெவ பகுதியில் உள்ள முன்னாள் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரின் உத்தியோகபூர்வ இல்லத்தின் வளாகத்திலிருந்து 341 தோட்டாக்கள் மற்றும் 4 கைக்குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன.

பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் படி, குறித்த பகுதியில் நேற்று மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது இவ்வாறு தோட்டாக்கள் மற்றும் கைக்குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன.

281 T-56 தோட்டாக்கள், ஐந்து மெகசின்கள் மற்றும் 84 எஸ் துப்பாக்கிக்கான 06 தோட்டாக்கள் உட்பட பெருமளவான தோட்டாக்கள் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, குறித்த பொலிஸ் அதிகாரி 2022 ஆம் ஆண்டு பணியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டதாகக் குறிப்பிடப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *