சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நெய்னாகாடு மல்கம்பிட்டி பகுதிகளில், வயல் அறுவடை இறுதி கட்டத்தை நெருங்கி இருக்கின்ற நிலையில் நரிகளின் நடமாட்டம் அதிகமாக காணப்படுகின்றது.
இவைகள், இலங்கை நரிகள் (Sri Lankan Jackal) அல்லது தென்னிந்திய குள்ள நரிகள் என அழைக்கப்படும், Canis aureus naria எனப்படும் நரிகள் என குறிப்பிடப்படுகின்றது.
வயல்வெட்டுக்கள் அல்லது அறுவடை முடிந்து செம்பு நிறத்தில் காணப்பட்ட வயற்பகுதிக்குள் செம்பு நிறங்களில் நரிகளின் நடமாட்டம் தென்படுகின்றது.
“இவ்வாறான நரிகள் ஒரு சூழற்றொகுதியின் சமனிலைக்கு மிக முக்கியமானது. நரிகள் மயில்கள் போன்ற பீடைகளைக் கட்டுப்படுத்தியும், மற்ற சிறு வேட்டையாடிகளின் குடித்தொகைகளை சமனிலைப்படுத்தியும் விவசாயிகளுக்கும், மக்களுக்கும் நன்மைகள் பயக்கின்றன” என இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பிரயோக விஞ்ஞான பீடத்தின் உயிரியல் விஞ்ஞான பீடத்தின் சிரேஷ்ட விரிவுரையாளரும், பிரிவுத் தலைவருமான ஏ.எம்.றியாஸ் அகமட் குறிப்பிட்டுள்ளார்.