உக்ரைனுக்கு 2.26 பில்லியன் பவுண்டுகள் ($2.84 பில்லியன்) கடனை வழங்குவதற்காக மார்ச் 1 அன்று கியேவ் உடன் ஐக்கிய இராச்சியம் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மரை(Keir Starmer) சந்திக்க, உக்ரைய்ன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கியின் லண்டன் வருகைக்கு இடையே கையெழுத்தானது.
உக்ரைனின் பாதுகாப்பில் ஐக்கிய இராச்சியம் தொடர்ந்து நிற்கிறது.
இங்கிலாந்தின் நிதி அமைச்சகம்
அத்துடன், உக்ரைனின் பாதுகாப்புத் திறன்களை வலுப்படுத்த பங்களிக்கும் இன்றைய ஒப்பந்தம் இதை உறுதிப்படுத்துகிறது என்று உக்ரைனின் நிதி அமைச்சர் செர்ஹி மார்ச்சென்கோ ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
உக்ரைனின் தேவைகளுக்கு ஏற்ப பாதுகாப்பு உபகரணங்களை வாங்குவதற்கு, இந்த கடன் உதவும் என்று இங்கிலாந்தின் நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
முன்னதாக, 2024, அக்டோபரில், இங்கிலாந்து G7 நாடுகள், உக்ரைனுக்கு கிட்டத்தட்ட 50 பில்லியன் டொலர்கள் கடனை வழங்குவதாக உறுதியளித்த ஒரு ஒப்பந்தத்திற்கு வந்தன என்பது குறிப்பிடத்தக்கது.