திருகோணமலை மாவட்ட கந்தளாய் சீனி தொழிற்சாலையில் பயிர்ச் செய்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள தற்காலிக காணி ஒதுக்கீடு மக்களுக்காக வழங்கி வைக்கப்பட்டன .
ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவின் திட்டத்தின் பிரகாரம், கந்தளாய் சீனி தொழிற்சாலைக்கு சொந்தமான விவசாய நிலத்தை தற்காலிகமாக அப்பகுதி மக்களுக்கு பயிர்ச்செய்கைக்காக வழங்கும் நிகழ்வு (01) கந்தளாய் நகர மண்டபத்தில் நடைபெற்றது.
கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரட்ணசேகர, வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர, திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரொஷான் அக்மீமன, திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யூ.ஜி.எம். ஹேமந்த குமார ஆகியோர்கள் கலந்து கொண்டு அனுமதி பத்திரங்களை வழங்கி வைத்தனர். குறித்த தொழிற்சாலை பல வருட காலமாக செயழிலந்து காணப்பட்டமையால் குறித்த நடவடிக்கை தற்போது மேற்கொள்ளப்பட்டது.
இதில் தம்பலகாமம் பிரதேச செயலாளர் திருமதி ஜெ.ஸ்ரீபதி உட்பட பலரும் கலந்து கொண்டனர்.