அமெரிக்காவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள உக்ரைன் ஜனாதிபதி வொலொடிமிர் ஜெலென்ஸ்கி ஜனாதிபதி டொனால்ட் டிரம்பினை சந்தித்து பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளப்போவதுடன் கனிமங்கள் தொடர்பான உடன்படிக்கையில் கைச்சாத்திடவுள்ளார்.
ரஸ்யாவின் படையெடுப்பிற்கு எதிராக உக்ரைன் முன்னெடுத்துள்ள போரிற்கு அமெரிக்காவின் ஆதரவை தொடர்ந்தும் பெற்றுக்கொள்வதற்கான முயற்சிகளில் உக்ரைன் தொடர்ந்தும் ஈடுபட்டுள்ள நிலையிலேயே இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
முன்னாள் ஜனாதிபதி ஜோபைடன் நிர்வாகத்திடமிருந்து மில்லியன் டொலர்கள் பெறுமதியான ஆயுதங்களையும் தார்மீக ஆதரவையும் பெற்றிருந்த உக்ரைன் ஜனாதிபதி இடிரம்ப் நிர்வாகத்திடமிருந்து முற்றிலும் மாறுபட்ட அணுகுமுறையை எதிர்கொள்கின்றார்.
அமெரிக்க ஜனாதிபதி மூன்றரை வருடகால போரை முடிவி;ற்கு கொண்டுவரவிரும்புவதாகவும்இமொஸ்கோவுடனான உறவுகளை மேம்படுத்த விரும்புவதாகவும் உக்ரைனிற்காக அமெரிக்கா செலவிட்ட பணத்தை மீளப்பெறவிரும்புவதாகவும் தெரிவித்திருந்தார்.
ஐரோப்பாவின் பாதுகாப்பு குறித்து அமெரிக்கா அதிகளவு அர்ப்பணிப்பை வெளிப்படுத்தாதும் குறிப்பிடத்தக்கது.
இரண்டாம் உலக யுத்தம் முதல் ஐரோப்பாவின் தவிர்க்க முடியாத சகாவாக அமெரிக்கா விளங்கி வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
உக்ரைனிற்கான முக்கிய ஆதரவாக விளங்கிய அமெரிக்கா தனது தொனியை மாற்றிக்கொண்டுள்ளமை ஐரோப்பாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதுடன்இரஸ்யாவிற்கு சாதகமான சமாதான உடன்படிக்கை உக்ரைன் மீது திணி;க்கப்படலாம் என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில வாரங்களாக முக்கியத்துவம் பெற்றுள்ள கனிமங்கள் குறித்த உடன்படிக்கை உக்ரைனின் கனிமங்களை அமெரிக்காவிற்கு திறந்துவிடும்.
எனினும் இந்த உடன்படிக்கையில் உக்ரைனின்பாதுகாப்பு குறித்த உத்தரவாதங்கள் எதுவும் இல்லாதமை குறிப்பிடத்தக்கது. இது குறித்து உக்ரைனில் ஏமாற்றம் நிலவுகின்றது.
உக்ரைனின் அரியவகை கனிமங்கள் விற்பனையுடன் தொடர்புபட்ட புனரமைப்பு முதலீட்டு நிதியம் அமெரிக்கா இதுவரை காலமும் உக்ரைனிற்கு வழங்கிய ஆயுதங்களின் பெறுமதியில் சில பில்லியன் டொலர்களை மீளபெற்றுக்கொள்வதற்கு உதவும் .
இதேவேளை கனிமங்கள் தொடர்பான உடன்படிக்கை ரஸ்யா கைப்பற்றியுள்ள பகுதிகளை மீள கைப்பற்றும் தனது நடவடிக்கைகளிற்கான அமெரிக்காவின் ஆதரவை பெற்றுத்தரும் என உக்ரைன் எதிர்பார்க்கின்றது.