ஜப்பானுக்கு விஜயம் செய்யுமாறு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு, ஜப்பான் உத்தியோகபூர்வமாக அழைப்பு விடுத்துள்ளது.
இன்று (27) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுடனான சந்திப்பின் போது இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் இசொமதா அகியோவால் இந்த உத்தியோகபூர்வ அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
விரைவில் ஜப்பானுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளுமாறு ஜப்பானிய தூதுவர் இசொமதா அகியோ , ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கு அழைப்பு விடுத்தார்.