யாழ் மீனவர்கள் போராட்டம்

ByEditor 2

Feb 27, 2025

இந்திய மீனவர்களின் எல்லை தாண்டி மீன்பிடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து வியாழக்கிழமை(27)  அன்று யாழ்ப்பாணத்தில் மாபெரும் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இந்த போராட்டமானது யாழ்ப்பாணம் நீரியல் வள திணைக்களத்திற்கு முன்னாள் ஆரம்பமாகிய நிலையில் பேரணியாக யாழ்ப்பாண நகர் பகுதி ஊடாக ஆளுநர் செயலகம் நோக்கி சென்று கொண்டிருக்கின்றது. 

யாழ்ப்பாணத்தில் உள்ள பெரும்பாலான கடற்றொழில் சங்கங்களை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான மீனவர்கள் இதில் பங்குபற்றியுள்ளனர். 

“தாண்டாத தாண்டாத எல்லையை தாண்டாதே, அழிக்காதே அழிக்காதே எமது வளங்களை அழிக்காதே, இந்திய அரசே எங்களை வாழ விடு, மீனவர்களின் வயிற்றில் அடிக்காதே” போன்ற கோஷங்களை எழுப்பிய நிலை மீனவர்கள் இப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *