கட்டுநாயக்க, விமான நிலையத்தில் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
உணவுப் பொட்டலங்களில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 1.2 கிலோகிராம் குஷ் போதைப்பொருளுடன் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மீட்கப்பட்ட போதைப்பொருட்களின் பெறுமதி 12 மில்லியன் ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.
போதைப்பொருள்
கைது செய்யப்பட்ட பெண் 38 வயதுடையவர் எனவும் அவர் ஹொங்கொங்கிலிருந்து பேங்கொக் வழியாக இலங்கை வந்தடைந்துள்ளார்.

அதற்கமைய, இந்தப் பெண் இலங்கை சுங்க பிரிவினரால் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பணியகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.