இந்தோனேசியாவில் நிலநடுக்கம்

ByEditor 2

Feb 26, 2025

இந்தோனேசியாவில் (Indonesia) 6.1 ரிச்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவல்களில் நிலநடுக்கம் காரணமாக எந்த சேதமோ அல்லது உயிரிழப்புகளோ ஏற்பட்டதாக தகவல் இல்லை என்று தெரிவித்துள்ளது.

உள்ளூர் நேரப்படி காலை 6:55 மணிக்கு இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

சுனாமி ஏற்படுவதற்கான சாத்தியம்

இது வடக்கு சுலவேசி மாகாணத்திற்கு அருகில் கடலோரத்தில் 10 கிலோமீட்டர் (6.2 மைல்) ஆழத்தில் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அந்நாட்டின் வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்புகளின் படி நிலநடுக்கம் 6.0 ரிச்டர் அளவில் பதிவாகி இருப்பாகவும், சுனாமி ஏற்படுவதற்கான சாத்தியம் இல்லை என்று கூறியுள்ளது.

முன்னதாக கடந்த ஜனவரி 2021ஆம் ஆண்டு சுலவேசியை உலுக்கிய 6.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் காரணமாக 100இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததோடு, ஆயிரக்கணக்கானோர் வீடுகளையும் இழந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *