குடிநீர் நெருக்கடியில் அவதிப்படும் மக்கள்

ByEditor 2

Feb 25, 2025

நாட்டில் நிலவும் வறட்சியான வானிலை காரணமாக, பல மாவட்டங்களில் 7,000 க்கும் மேற்பட்ட மக்கள் குடிநீர் நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ திணைக்களம் தெரிவித்துள்ளது.

வறட்சியான வானிலையால் குடிநீர் நெருக்கடியில் அவதிப்படும் மக்கள் | People Suffering From Drinking Water Crisis

களுத்துறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் 2295 குடும்பங்களைச் சேர்ந்த 7258 பேர் குடிநீர் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டு்ள்ளது.

அதன்படி, களுத்துறை மாவட்டத்தில் உள்ள மதுகம பிரதேச செயலாளர் பிரிவு மற்றும் இரத்தினபுரி மாவட்டத்தில் உள்ள வெலிகெபொல, எஹெலியகொட மற்றும் கலவான பிரதேச செயலாளர் பிரிவுகளைச் சேர்ந்த மக்களும் குடிநீர் நெருக்கடியை எதிர்கொள்வதாகத் தெரிவிக்கப்படுகிறது.  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *