அந்த இறைவன் நமக்கென குறித்த நேரத்தில்

ByEditor 2

Feb 25, 2025

ஒருவன் 20 வயதில் திருமணம் செய்கிறான், ஆனால், 10 வருடங்கள் கழித்தே அவனுக்கு குழந்தை கிடைக்கிறது …!

இன்னொருவன் 30 வயதில் திருமணம் செய்கிறான், ஆனால் ஒரு வருடத்தில் குழந்தை கிடைக்கிறது…!

ஒருவன் 22 வயதில் பல்கலைக்கழக பட்டதாரி ஆகிறான், ஆனால், 5 வருடங்களுக்குப் பின்பே அவனுக்கு தொழில் கிடைக்கிறது…!

இன்னொருவன் 27 வயதில் பட்டதாரி ஆகிறான், அடுத்த வருடமே அவனது தொழில் கனவு நனவாகிவிடுகிறது…!

ஒருவன் 25 வயதில் நிறுவனத்தில் தலைமைப் பொறுப்பை ஏற்கிறார், 45 வயதில் அவர் மரணித்து விடுகிறார்…!

இன்னொருவன் 50 வயதில் நிறுவனத்தில் தலைவர் ஆகிறார், 90 வயது வரை வாழ்ந்து விட்டு செல்கிறார்…!

ஒருவனுக்கு அழகான மனைவி கிடைத்திருக்கும், ஆனால் அன்பான மனைவியாக அவள் இருக்கமாட்டாள்…!

இன்னொருவனுக்கு அன்பான மனைவி கிடைத்திருக்கும், ஆனால் அழகில் குறை இருக்கும்…!

ஒருவனுக்கு பிள்ளை பாக்கியம் இருக்காது.

மற்றவனுக்கு பிறந்த பிள்ளையில் ஊனம் இருக்கும்.

ஒருவனிடம் நல்ல பணம் இருக்கும், ஆனால் அவனது உடல் ஆரோக்கியத்தில் குறை இருக்கும்…!

மற்றொருவரினிடம் நல்ல உடல் ஆரோக்கியம் இருக்கும், ஆனால் அவனிடம் பணம் இருக்காது…!

ஒருவன் 10 லட்சம் சம்பளம் வாங்குவான், 40 வயதில் இறந்து போவான். இன்னொருவன் 10 ஆயிரம்தான் சம்பளம் வாங்குவான், 80 வருடம் வரை ஆரோக்கியமாக வாழ்ந்துவிட்டு செல்வான்.

இப்படி பல நுணுக்கமான, எண்ணிலடங்கா உதாரணங்கள்…!

இது, நீங்கள் பார்க்க அநியாயமான உலகம் போன்று தோன்றும், ஆனால் நீங்கள் ஆழமாக நோக்கினால் அங்கே நியாயங்கள் தென்படும்…!

மேலோட்டமாக பார்த்தால் இடியாப்பச் சிக்கல் மயமான உலகம் போன்று தோன்றும், சற்று உள்ளே நுழைந்து பார்த்தால் கண் காணாத தர்க்கபூர்வமான வலைப்பின்னலால் நெய்யப்பட்ட நியாயமான வாழ்கை என்பது தெரியவரும்…!

நம்மால் புரிந்துகொள்ள மிக சிரமமான இத்தகைய ஏற்பாடுகள் எல்லாம் வல்ல இறைவன் ஏற்கனவே நிகழ்சிநிரல் செய்த நேர சூசிகள்தாம்…!

உங்களுக்கு முன்னால் உள்ளவர்கள் யாரும் முந்தியவர்களும் அல்ல, உங்களுக்குப் பின்னால் உள்ளவர்கள் யாரும் பிந்தியவர்களும் அல்ல…!

நீங்களும் யாரையும் முந்தவும் இல்லை, நீங்கள் யாரையும் பிந்தவும் இல்லை…!

அந்த இறைவன் உங்களுக்கென குறித்த நேரத்தில் நீங்கள் உங்களது பணியை செய்து கொண்டிருக்கின்றீர்கள்! அவ்வளவே…!

ஆதலால், உங்களுக்கென குறிக்கப்பட்ட நேரகாலத்தை செவ்வனே பயன்படுத்திக்கொள்ளுங்கள்…!

எழுதுகோல்கள் உயர்த்தப்பட்டுவிட்டன, ஏடுகளும் மடித்து வைக்கப்பட்டுவிட்டன…!

ஆக, உங்ககளது நேரத்தில் உங்களது வேலையை திறம்பட செய்துவிடுங்கள்…!

வான்மறை வசனம் ஒன்று இப்படிச் சொல்கிறது:

((ஒவ்வொருவரும் தத்தமது வழியிலே செயல்படுகின்றனர். எனினும் யார் நன்நெறியில் செயல்படுபவர் என்பதை உங்கள் இறைவனே நன்கு அறிந்தவன்.’ என்று (தூதரே!) நீர் கூறுவீராக!))

அல்குர்ஆன் : 17:84)

வாழும் வரை புண்ணியங்கள் செய்து வாழ்ந்திட வாழ்த்துக்கள்…!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *