தினசரி டயட்டில் சர்க்கரைவள்ளி கிழங்கை சேர்ப்பதால் இத்தனை நன்மைகளா?

ByEditor 2

Feb 25, 2025

சர்க்கரைவள்ளி கிழங்கு நமக்கு எண்ணற்ற அற்புத ஆரோக்கிய நன்மைகளை வழங்குகின்றன. சர்க்கரைவள்ளி கிழங்கு நம்முடைய செல்களை சேதத்திலிருந்து பாதுகாக்கும் ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ் நிறைந்த ஆரோக்கியமான வேர் காய்கறி (நிலத்தடி கிழங்கு) ஆகும்.

தினசரி டயட்டில் சர்க்கரைவள்ளி கிழங்கை சேர்ப்பதால் இத்தனை நன்மைகளா? | Daily Diet Sweet Potato Eat With Good News

உங்கள் டயட்டில் தினமும் சர்க்கரைவள்ளி கிழங்கை சேர்த்து கொள்வதால் கிடைக்கும் முக்கிய நன்மைகளை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.

தினசரி டயட்டில் சர்க்கரைவள்ளி கிழங்கை சேர்ப்பதால் இத்தனை நன்மைகளா? | Daily Diet Sweet Potato Eat With Good News

ரத்த சர்க்கரையை கட்டுப்படுத்துகிறது

இந்த கிழங்குகள் 44 முதல் 96 வரை மீடியம் முதல் ஹை கிளைசெமிக் இன்டெக்ஸ் உடன், ரத்த சர்க்கரை அளவை பராமரிக்க உதவுகின்றன. சர்க்கரைவள்ளி கிழங்கை மிதமான அளவில் எடுத்து கொள்ளும்போது அது நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்றதாக இருக்கும். இதிலிருக்கும் மாங்கனீஸ், கார்போஹைட்ரேட் வளர்சிதை மாற்றத்திற்கு உதவுகிறது. சர்க்கரை அளவை ஒழுங்குபடுத்துகிறது மற்றும் ரத்த சர்க்கரை அளவில் ஏற்படும் திடீர் அதிகரிப்பை தடுக்கிறது.

தினசரி டயட்டில் சர்க்கரைவள்ளி கிழங்கை சேர்ப்பதால் இத்தனை நன்மைகளா? | Daily Diet Sweet Potato Eat With Good News

செரிமான ஆரோக்கியத்திற்கு சிறந்தது

இந்த வகை கிழங்கில் நார்ச்சத்து இருப்பதன் காரணமாக இவை செரிமான ஆரோக்கியத்தை சிறப்பாக வைத்திருக்க உதவுகின்றன. சர்க்கரைவள்ளி கிழங்குகளில் பெக்டின் போன்ற கரையக்கூடிய நார்ச்சத்து (15-23%) மற்றும் செல்லுலோஸ் மற்றும் லிக்னின் உள்ளிட்ட கரையாத நார்ச்சத்து (77-85%) என இரண்டும் உள்ளன. பெரிய பாதிப்புகள் அல்லது நோய்களை தடுக்க, பொதுவாக தினசரி 21-38 கிராம் நார்ச்சத்து எடுத்து கொள்ள நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.

தினசரி டயட்டில் சர்க்கரைவள்ளி கிழங்கை சேர்ப்பதால் இத்தனை நன்மைகளா? | Daily Diet Sweet Potato Eat With Good News

இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க சிறந்தது

சர்க்கரைவள்ளி கிழங்கில் இருக்கும் வைட்டமின் பி6, உடலில் உள்ள ஹோமோசிஸ்டீன் (homocysteine ) அளவை குறைப்பதன் மூலம் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. Hhomocysteine அளவு அதிகம் இருப்பது என்பது மாரடைப்புடன் தொடர்புடையது. கூடுதலாக இந்த கிழங்குகளில் உள்ள பொட்டாசியமானது, உடலில் திரவ சமநிலையை பராமரிக்க மற்றும் அதிகரித்து காணப்படும் ரத்த அழுத்தத்தை குறைக்கவும் உதவுகிறது.

தினசரி டயட்டில் சர்க்கரைவள்ளி கிழங்கை சேர்ப்பதால் இத்தனை நன்மைகளா? | Daily Diet Sweet Potato Eat With Good News

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்

சர்க்கரைவள்ளி கிழங்குகளில் உள்ள ஆந்தோசயனைட்ஸ் மற்றும் கோலின் போன்ற அழற்சி எதிர்ப்பு சேர்மங்கள், நம்முடைய நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும். மேலும் இதில் இருக்கும் இரும்புச்சத்து மன அழுத்தத்திற்கு எதிரான ரெசிஸ்டென்ஸை வழங்க உதவுகிறது. சிவப்பு மற்றும் வெள்ளை ரத்த அணுக்களின் உற்பத்தியை அதிகரிக்கிறது மற்றும் நோய் எதிர்ப்பு செயல்பாட்டை சீராக வைக்க உதவுகிறது.

தினசரி டயட்டில் சர்க்கரைவள்ளி கிழங்கை சேர்ப்பதால் இத்தனை நன்மைகளா? | Daily Diet Sweet Potato Eat With Good News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *