ஜனாதிபதியின் ஊடக ஆலோசகராக சிரேஷ்ட ஊடகவியலாளர் திரு.சந்தன சூரியபண்டார நியமிக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை, ஜனாதிபதி ஊடகப் பிரிவின் கீழ் இயங்கும் சர்வதேச ஊடகம் மற்றும் மூலோபாய தொடர்பாடல் பணிப்பாளராக மூத்த ஊடகவியலாளர் திரு அனுருத்த லொகூஹாபுஆராச்சி நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த இரண்டு அதிகாரிகளும் இன்று பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவிடமிருந்து தமது நியமனக் கடிதங்களைப் பெற்றுக்கொண்டனர்.