அரச ஊழியர்களின் சம்பள தொடர்பில் தெளிவுபடுத்திய அமைச்சர்

ByEditor 2

Feb 23, 2025

அரசாங்க ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு, அரச சேவையில் கனிஷ்ட மட்டத்தில் ஆகக் குறைந்த சம்பளம் 5,975 ரூபாவினால் அதிகரிப்பதாக தொழில் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

அண்மையில் இடம்பெற்ற பாராளுமன்றத்தில் வரவு-செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு விவாதத்தில் கலந்து கொண்ட பிரதி அமைச்சர் இதனை குறிப்பிட்டார். 

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அமைச்சர்;
தற்போது அரசாங்க சேவையில் கொடுப்பனவுகள் இரண்டு வழங்கப்படுகின்றன. ஒன்று வாழ்க்கைச் செலவு கொடுப்பனவாக 17,800 ரூபாவும் மேலும் கொடுப்பனவுகள் இரண்டு கொடுப்பனவுகள் கடந்த காலங்களில் அதிகரிக்கப்பட்ட 7,500 ரூபாவும் காணப்படுகிறது. அது 5,000 ரூபாய் மற்றும் 2,500 ரூபாய்கள் ஆகும். இந்த 7500 ரூபாய் என்பது 15,750 ரூபாயினுள் சம்பள அதிகரிப்பிற்கு அதிகரிக்கப்படும். அடிப்படைச் சம்பளம் 15,750 ரூபாவினால் அதிகரிக்கும் போது அங்கு காணப்படும் 7,500 ரூபாய் புதிதாக மீதப்படும் பகுதியாகும். ஹர்ஷதி செல்வா குறிப்பிட்ட பி எல் (PL) இந்த சம்பளம் மாத்திரம் ஏனைய சம்பளம் பற்றி கதைக்கவில்லை. 
அதனால் இந்த வருடத்தில் 5000 ரூபாவில்  மீதப்படும் 3,250 ரூபாவின் 975 ரூபாவும் அதிகரிக்கப்படும். அதன்போது, அரசாங்க சேவையில் பி எல் (PL)1 தரத்தின் குறைந்த சம்பளம் 5,975 ரூபாவினால் அதிகரிக்கும். 

அதேபோல, அரசாங்க சேவையில் ஒவ்வொருவருக்கும் வருடாந்த சம்பள அதிகரிப்பு 80% வீதத்தினால் உயரும். குறைந்தது 250 ரூபாய் வருடாந்த சம்பள உயர்வு 450 ரூபாய் வரை 80% வீதத்தினால் அதிகரிக்கும்.

இதன்போது பிரதி அமைச்சர் அபிவிருத்தி உத்தியோத்தர், ஆசிரியர் சேவை, அதிபர் ஆகிய சேவைகள் மற்றும் முகாமைத்துவ உதவியாளர் MN I உத்தியோகத்தர்களுக்கான சம்பள அதிகரிப்புத் தொடர்பாகவும் தெளிவு படுத்தினார்.
கிராம உத்தியோகத்தர் சேவையின் தற்போதைய சம்பளம் GN-1- 28,940 மூன்று ஆண்டுகளுக்குள் 56,630 ரூபாவாக அதிகரிக்கும். அதுபோல் மறக்க வேண்டாம் 40,000 ரூபாய் அடிப்படை சம்பளத்திற்கு 17,500 எனப்படும் வாழ்க்கைச் செலவுப்படி அதே விதத்திலேயே சேர்க்கப்படும். அத்துடன், அவர்களின் மொத்த அதிகரிப்பு 21,690 ரூபாய் அதிலிருந்து 17,500 ரூபாய்களை கழித்தால் அவர்களது நிகர சம்பள அதிகரிப்பு 14,190 ரூபாவாகும். அதாவது இன்றைய நாள் கிராம உத்தியோகத்தர் ஒருவரின் சம்பளம் 9,257 ரூபாவினால் அதிகரிக்கும். 
தற்போது மருத்துவ சேவையில் ஈடுபட்டுள்ள வைத்தியர்களின் (MO) சம்பளம் 54,250 ரூபாய். அது 91,750 ரூபாய் வரை அடிப்படைச் சம்பளத்தில் அதிகரிக்கப்படும். அதன்போது அவர்களது மொத்த சம்பள அதிகரிப்பு 37,460 ரூபாவில் 7,500 ரூபாய்களை கழித்தால் 29,960 ரூபாவின் 30% சதவீதம் வழங்கப்படும். மொத்த அதிகரிப்பில் 7,500 ரூபாவை கழித்தால் மீதமாகும் 30% சதவீதம் இந்த வருடத்தில் ஏப்ரல் முதலாம் திகதியிலிருந்து சகல அரச ஊழியர்களுக்கும் கிடைக்கும். அதன்போது வைத்தியர் ஒருவரின் சம்பளம் 13,988 ரூபாவினால் அதிகரிக்கும். 

தற்போது மணித்தியாலத்திற்கு 687 ரூபாய் வழங்கப்படுகின்றது. இந்த புதிய சம்பள அதிகரிப்பினால் புதிதாக இணைந்து கொள்ளும் மருத்துவ உத்தியோகத்தர் ஒருவருக்கு  மேலதிக நேரக் கொடுப்பனவு 764 ரூபாவாகும் என்றும் பிரதி அமைச்சர் விபரித்தார். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *