சீனாவில் புதிய வகை கோவிட் 19 வைரஸ் கண்டுபிடிப்பு

ByEditor 2

Feb 22, 2025

சீனாவில் புதிய வகை கோவிட் வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

நச்சுயிரியல் வல்லுநரான ஷி ஷெங்லி தலைமையிலான குழுவினர் மேற்கொண்ட ஆய்வில் புதிய வகை வைரஸ் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளது.

கோவிட் 19 தொற்றினை போன்றே இந்த புதிய தொற்றும் விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்குப் பரவும் அபாயம் கொண்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகின்றது.

புதிய வகை வைரஸ்

குறித்த புதிய வகை கோவிட் வைரஸ் ஹெச்.கே.யு.5 (HKU5) என அழைக்கப்படுகிறது.

சீனாவில் புதிய வகை கோவிட் 19 வைரஸ் கண்டுபிடிப்பு | Discovery Of New Type Of Covid 19 Virus In China

இந்த வைரஸ் தொற்றும் மனிதர்களின் சுவாச மண்டலத்தைப் பாதிக்கும் தன்மை கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *