மனைவி அதிக கடன் பெற்ற விரக்தியில் கணவன் உயிரிழப்பு

ByEditor 2

Feb 22, 2025

மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நவாலி பகுதியில் ஆணொருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவமானது இன்று (22) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது நவாலி வடக்கு பகுதியைச் சேர்ந்த ம.பாலகிருஷ்ணன் (வயது 47) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

அதிக கடன்

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த நபர் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக காணப்பட்டதை அவதானித்த அவரது உறவுகள் இது குறித்து மானிப்பாய் பொலிஸாருக்கு தெரியப்படுத்தியுள்ளனர்.

யாழில் மனைவி அதிக கடன் பெற்ற விரக்தியில் கணவன் உயிர்மாய்ப்பு! | Husband Died His Wife Took Credit Jaffna

அவரது சடலமானது மீட்கப்பட்டு யாழ். போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, உடற்கூற்று பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்ட பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

மனைவி அதிக கடன் பெற்றதன் காரணமாகவே குறித்த நபர் மனவிரக்தியில் உயிர்மாய்த்ததாக விசாரணைகளில் தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *