சஞ்சீவ கொலையில் மேலும் இருவர் கைது

ByEditor 2

Feb 22, 2025

கனேமுல்ல சஞ்சீவ கொலைச் சம்பவம் தொடர்பாக மேலும் இரண்டு சந்தேக நபர்கள் கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்களில் ஒருவர், துப்பாக்கிச் சூடு நடத்திய சந்தேகநபரை கடுவலையில் இருந்து கொழும்பு நீதவான் நீதிமன்றம் வரை அழைத்து வந்ததாக கூறப்படும் சாரதியான தொன் ஜனக உதய குமார என்பவர் ஆவார்

பொலிஸ் கான்ஸ்டபிள்  கைது

மற்றைய சந்தேக நபர் அத்துருகிரிய பொலிஸை சேர்ந்த ஹசித ரோஷன் என்ற பொலிஸ் கான்ஸ்டபிள் என்பது தெரியவந்துள்ளது.

இந்த சந்தேகநபர்கள் இன்று (22) கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர், மார்ச் 7 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.

கனேமுல்ல சஞ்சீவ கொலைச் சம்பவம் தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணைகள் குறித்த அறிக்கையையும் பொலிஸார் இன்று நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளனர்.

அதேவேளை கனேமுல்ல சஞ்சீவ கொலை தொடர்பில் இதுவரை 5 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *