எம்.பி.க்களுக்கு விஐபி பாதுகாப்பு வழங்க பரிசீலிப்பு

ByEditor 2

Feb 22, 2025

கொழும்பு – அளுத்கடே நீதிமன்றத்தில் சாட்சிக் கூண்டில் வைத்து பாதாள உலக சஞ்சீவ சுட்டுக் கொல்லப்பட்ட பின்னர், விஐபி பாதுகாப்பு குறித்து மீண்டும் பரிசீலிக்க பாதுகாப்புப் பிரிவினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இதன்படி, ஜனாதிபதி முதல் அனைத்து எம்.பி.க்கள் வரை இந்த பாதுகாப்பு மறு ஆய்வு செய்யப்பட உள்ளது.

தேவைப்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும்

இது தொடர்பாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறுகையில்,  விஐபி பாதுகாப்பு குறித்து பாதுகாப்புப் பிரிவினர் அவ்வப்போது ஆய்வு செய்வதாக தெரிவித்தார்.

அதன்படி, எதிர்காலத்தில் தேவைப்பட்டால்  நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார். இதற்கிடையில், பாராளுமன்ற உறுப்பினர்களும் தங்கள் பாதுகாப்புக்கு நடவடிக்கை எடுக்குமாறு பாராளுமன்றத்தில் கோரிக்கை விடுத்தனர்.

அதன்படி, உறுப்பினர்களின் பாதுகாப்பு குறித்து உரிய நடவடிக்கை எடுக்க பதில் பொலிஸ் மா அதிபருக்கு அனுப்பியுள்ளதாக சபாநாயகர் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

Gun shoot colombo

புதிய அரசாங்கத்தின் பல அமைச்சர்கள் மற்றும் எம்.பி.க்கள் தற்போது பொலிஸ் பாதுகாப்பு இல்லாமல் பயணம் செய்து வருகின்றனர், மேலும் அவர்கள் பொலிஸ் பாதுகாப்பை பெற மறுத்து வருகின்றனர்.

விஐபி பாதுகாப்பு பிரிவில் இருந்த பெரும்பாலான பொலிஸ் அதிகாரிகள் தற்போது சாதாரண பணிகளுக்கும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Gun shoot colombo

அதேவேளை கொழும்பு, கொட்டாஞ்சேனை பகுதியில் நேற்று இரவு மேற்கொள்ளப்பட்ட மற்றுமொரு துப்பாக்கிச் சூடு தொடர்பாக கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேக நபர்களும் பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்தச் சம்பவம் மட்டக்குளி, காக்கைதீவு கடற்கரைப் பகுதியிலேயே இடம்பெற்றுள்ளமை மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *