நீதிமன்ற துப்பாக்கிச்சூட்டு – புலனாய்வு பிரிவுகளுக்கு முன்கூட்டியே தகவல்

ByEditor 2

Feb 22, 2025

நீதிமன்ற வளாகத்தில் துப்பாக்கிச்சூட்டு சம்பவம் குறித்து புலனாய்வு அமைப்புகளுக்கு முன்கூட்டியே தகவல் கிடைத்திருந்ததாக பாராளுமன்ற உறுப்பினர் ரோஹண பண்டார தெரிவித்துள்ளார்.   எனினும் இதை தடுக்க தவறியதால் ‘கணேமுல்ல சஞ்சீவ’ என்ற நபர் சுட்டுக் கொல்லப்பட்டார் என்றும் குறிப்பிட்டார்.

பாராளுமன்றத்தில் கருத்து தெரிவிக்கும் போதே இதை குறிப்பிட்டார். தொடர்ந்து தெரிவிக்கையில்,

நீதிமன்ற அறைக்குள் துப்பாக்கிதாரியை கடத்த உதவிய பெண் குறித்து உளவுத்துறை முன்கூட்டியே தகவல்களை சேகரித்ததாகவும் கூறினார்.

“சிங்கபுர தேவகே இஷாரா செவ்வந்தி என்ற இந்த பெண் தாக்குதலுக்குத் தயாராகி வருவதாக உளவுத்துறை முன்னதாகவு தகவல் அளித்திருந்தது.

ஆனால் இந்த தேசிய பாதுகாப்பு நிபுணர்கள் என்று அழைக்கப்படுபவர்களால் ஏதாவது செய்ய முடிந்ததா?” என்று அவர் கேள்வி எழுப்பினார், இந்த சம்பவத்தை 2019 ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களுடன் ஒப்பிட்டுப் பேசினார்.

துப்பாக்கிதாரி சில மணி நேரங்களுக்குள் பிடிபட்டதாகக் கூறினாலும், குற்றத்திற்கு உதவிய பெண் தப்பி ஓடிவிட்டதாகக் குறிப்பிட்டார். சந்தேக நபரின் கைது நடவடிக்கையை அதிகாரிகள் கையாண்ட விதத்தையும் அவர் கண்டித்தார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *