கணேமுல்ல சஞ்சீவவின் உடல் தாயாரிடம் ஒப்படைப்பு

ByEditor 2

Feb 21, 2025

கணேமுல்ல சஞ்சீவவின் கொலை தொடர்பாக மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வரும் பொலிஸார், தற்போது மேலும் சில உண்மைகளை வெளிக்கொணர்ந்துள்ளனர்.

அதன்படி, துப்பாக்கிச் சூடு நடத்தியவரும், அந்தப் பெண்ணும் கடுவெல பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் இருந்து இந்தக் கொலையைச் செய்ய வந்திருப்பது தெரியவந்துள்ளது.

கம்பஹா, மல்வத்து, ஹிரிபிட்டிய பகுதியில் இருந்து வாடகைக்கு எடுக்கப்பட்டு, சம்பந்தப்பட்ட ஹோட்டலில் இருந்து அளுத்கடே நீதவான் நீதிமன்றத்திற்கு பயணிக்கப் பயன்படுத்தப்பட்ட Honda FIT காரையும் கொழும்பு குற்றப்பிரிவு பறிமுதல் செய்துள்ளது.

இதற்கிடையில், படுகொலை செய்யப்பட்ட கணேமுல்ல சஞ்சீவவின் உடல் நேற்று பிற்பகல் பொரளையில் உள்ள தனியார் இறுதிச் சடங்கு மையத்திற்கு கொண்டு வரப்பட்டது.கொழும்பு பொலிஸ் பிணவறையில் நேற்று பிற்பகல் சடலத்தின் பிரேத பரிசோதனை நடத்தப்பட்டது, மேலும் அவரது மூத்த சகோதரி மற்றும் தாயார் உடலைப் பெற வந்திருந்தனர்.

நீர்கொழும்பு,கொச்சிக்கடை ரிதிவேலி வீதியில் இந்த ஆடை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.சந்தேகநபர் வழங்கிய வாக்குமூலங்களை தொடர்ந்தே இந்த ஆடை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே , கணேமுல்ல சஞ்சீவவின் உடல் அவரது தாயாரிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக காவல்துறை நீதிமன்றில் அறிவித்துள்ளது

கொழும்பு தலைமை நீதவான் தனுஜா லக்மாலியின் பணிப்புரையின் கீழ் கணேமுல்ல சஞ்சீவவின் உடல் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் பிரேதப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது.

உடலை பொரளை பொது மயானத்தில் அடக்கம் செய்யுமாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *